பின்லேடனின் பாதுகாப்பு தலைவர் ஆப்கான் திரும்பி வந்ததால் மக்கள் அச்சத்தில்

அமெரிக்கா மற்றும் நேட்டோ துருப்புகள் வெளியேறிய பின்னர் உலகின் மிகப்பெரிய தீவிரவாதிகள் பலர் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க சிறப்பு படைகளால் படுகொலை செய்யப்பட்ட ஒசாமா பின்லேடனின் முதன்மை பாதுகாப்பு தலைவராக செயல்பட்ட அமீனுல் ஹக்கும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பி வந்த காணொளி காட்சிகள் தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

2020ல் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புடன் தாலிபான்கள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், ஆப்கானிஸ்தான் மண்ணில் இனி மேல் தீவிரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே.

மேலும், உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக வாய்ப்புள்ள தீவிரவாதிகளையோ, தொடர்புடைய நபர்களையோ, குழுக்களையோ நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என தாலிபான்களும் அமெரிக்க நிர்வாகத்திற்கு உறுதி அளித்திருந்தனர்.

ஆனால், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க துருப்புகள் வெளியேறும் சில மணி நேரங்களுக்கு முன்னர் அமீனுல் ஹக் காபூல் நகரில் மீண்டும் தென்பட்டுள்ளார். அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முன்னணி ஆயுத விநியோகஸ்தராக செயல்பட்டு வந்த அமீனுல் ஹக் தாம் பிறந்த ஆப்கானிஸ்தானில் உள்ள நங்கர்ஹர் பிராந்தியத்திற்கு திரும்பியதாக கூறும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *