கடந்த ஒன்பது மாதங்களில் பேஸ்புக் தொடர்பில் சுமார் 23 ஆயிரம் முறைப்பாடுகள்

இவ்வாண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் பேஸ்புக் தொடர்பான 23,534 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர பதில் மன்றத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவற்றில் 70 வீதமானவை பெண்களிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

” வேலை வழங்குவதாக கூறி இணையத்தில் செய்யும் மோசடிகள் தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதற்கு அடுத்தபடியாக இணையத்தில் செய்யப்படும் பிரமிட் மோசடிகள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மேலும், போலி ஃபேஸ்புக் கணக்குகளை உருவாக்கி, ஃபேஸ்புக் கணக்குகளை ஹேக் செய்வதாகவும் புகார்கள் உள்ளன.

இவற்றில் கடந்த மே மாதத்தில் அதிகளவான பேஸ்புக் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன் எண்ணிக்கை 3328 ஆகும்.

மேலும் பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகளை 101 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக்கொண்டு தெரிவிக்க முடியும்.” எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *