இம்யுனோகுளோபலின் மருந்து இறக்குமதியில் மோசடி? இலங்கைக்கு வழங்கவில்லை என இந்தியா மறுப்பு

சுகாதார அமைச்சு  தற்போது பயன்பாட்டிலிருந்து நிறுத்திவைத்துள்ள இம்யுனோகுளோபலின் (immunoglobulin)  மருந்தினை இலங்கைக்கு தான் அனுப்பவில்லை என இந்திய நிறுவனம் மறுத்துள்ளதை தொடர்ந்து அந்த மருந்து எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்ற கேள்விகள் எழுந்துள்ளதுடன் மோசடி இடம்பெற்றதா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

இலங்கையில் தற்போது சுகாதார அமைச்சு பயன்பாட்டிலிருந்து நிறுத்திவைத்துள்ள  இம்யுனோகுளோபலின் மருந்தினை இலங்கைக்கு வழங்கியதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய நிறுவனம் Livealth Biopharma Pvt. Ltd. அதனை தான் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.

இந்திய நிறுவனம் இலங்கையின் மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளதுடன் இந்த மருந்தினை உற்பத்தி செய்தது யார் ? இலங்கை இறக்குமதியாளர் யார் ? இந்தியாவின் எந்த துறைமுகத்திலிருந்து இந்த மருந்துகள் வந்தன ? இலங்கையின் எந்த துறைமுகத்திற்கு வந்தன ? என்ற விபரங்களை கோரியது.

உண்மையான மருந்து ஏற்றுமதியாளர்களின் கௌரவத்தை பாதுகாப்பதற்கும்  மிக முக்கியமாக விலைமதிப்பற்ற  உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இத்தகைய மோசடி நிறுவனங்களை இனங்கண்டு நீதியின் முன் நிறுத்தவேண்டும் என  இந்தியாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் இது குறித்து உத்தியோகபூர்வ முறைப்பாட்டை பதிவு செய்யப்போவதாக இந்திய நிறுவனம்  தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *