வைத்தியசாலைகளில் நோயாளர் வருகை 49 வீதத்தால் அதிகரிப்பு

கொழும்பில் பிரதான வைத்தியசாலைகளின் வெளி நோயாளர் பிரிவுகளில் மாத்திரம் நோயாளர் வருகை 49 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நாடளாவிய ரீதியில் இது 42 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், அவசரமாக தேவைப்படும் மருந்துகளின் தற்போதைய நிலை தொடர்பில் உரிய சான்றுகளுடன் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

” சுகாதாரத்துறை தொடர்பில் பத்திரிகைகளில் சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் தற்போது மட்டுமின்றி, எதிர்காலத்திலும் அந்தத் துறையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இதுபோன்ற தகவல்களை வைத்துக்கொண்டே எதிர்கட்சித் தலைவர் போன்றோர் பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புகின்றனர்.

இந்த தகவல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை, நோயாளர் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு செல்வது குறைவடைந்துள்ளதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நான்கு நாட்களுக்கு முன்பதாகவே நான் இது தொடர்பில் அறிந்து கொண்டேன்.

உடனடியாகவே தொடர்புபட்ட அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.

அதனையடுத்து நாட்டிலுள்ள அனைத்து ஊடகங்களையும் அழைத்து, அது தொடர்பில் தெளிவுபடுத்தினேன்.” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *