அதிக முறை 400 ஓட்டங்கள் – சாதனை முறியடிப்பு!

தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 416 ஓட்டங்கள் குவித்தது. ஹென்ரிச் கிளாசென் 83 பந்துகளில் 13 பவுண்டரி, 13 சிக்சர் உள்பட 174 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 45 பந்துகளில் 6 பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 82 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வான்டெர் டுசன் அரை சதமடித்து 62 ஓட்டங்களில் அவுட்டானார். 5 வது விக்கெட்டுக்கு கிளாசன், மில்லர் ஜோடி 94 பந்துகளில் 222 ஓட்டங்கள் குவித்து அசத்தியது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் 7 வது முறையாக 400 ஓட்டங்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
மேலும், அதிக முறை 400 ஓட்டங்கள் எடுத்த பட்டியலில் இந்தியாவின் சாதனையை தென் ஆப்பிரிக்கா முறியடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *