முறியடிக்க முடியாத விராட் கோலியின் மூன்று சாதனைகள்!

ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்த பின்னர், தனது டெஸ்ட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார் விராட் கோலி.  பின்னர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரோஹித் ஷர்மா இந்திய அணியின் அனைத்து வடிவ கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், டி20 உலகக் கோப்பை 2021 நவம்பரில் முடிவடைந்த பிறகு, கோலியிடம் இருந்து டி20 மற்றும் ஒருநாள் கேப்டன்சி பொறுப்பு ரோஹித்திடம் கொடுக்கப்பட்டது.

அதன் பிறகு இந்திய அணி கடந்த ஒன்பது மாதங்களில் டி20 வடிவத்தில் ஒரு தொடரை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி அற்புதமான வெற்றிகளை பெற்று வருகிறது.  இருப்பினும், ரோஹித் இன்னும் ஒரு டெஸ்ட் கேப்டனாக தனது திறமையை நிரூபிக்கவில்லை, குறிப்பாக வெளிநாட்டு தொடர்களில். ரோஹித் சர்மா முறியடிக்கத் முடியாத விராட் கோலியின் மூன்று கேப்டன்சி சாதனைகள்.

விராட் கோலியின் 3 கேப்டன்சி சாதனைகளை ரோஹித் சர்மா முறியடிக்க முடியாது

1. இந்திய கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகள்

ரோஹித் ஷர்மா 2007 ஆம் ஆண்டு தனது சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.  மேலும் பல ஆண்டுகளாக இந்தியா அணிக்காக விளையாடி வருகிறார்.  இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு பெரிதாக இடம் கிடைத்ததில்லை.  அக்டோபர் 2019-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ரோஹித் அடித்த இரட்டை சதத்திற்குப் பிறகுதான் அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது.  மறுபுறம், விராட் கோலி 2014 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்முறையாக இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தார்.  மொத்தம் கேப்டனாக 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார், இதன்மூலம், இந்திய கேப்டனாக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை படைத்தார். ரோஹித் ஏற்கனவே 34 வயதாகிவிட்டதால், இந்த சாதனையை முடியடிக்க இயலாது.

2. இந்திய கேப்டனாக அதிக டெஸ்ட் இரட்டை சதம் அடித்தவர்

தற்போதைய நிலவரப்படி ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இரட்டை சதம் மட்டுமே அடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிப்பது அவ்வளவு எளிதானதல்ல. விராட் கோலி 2016 முதல் 2019 வரை இந்திய கேப்டனாக ஏழு டெஸ்ட் சதங்களை அடித்த மைல்கல்லை எட்டினார். விராட் வெஸ்ட் இண்டீஸ் (ஜூலை 2016), நியூசிலாந்து (அக்டோபர் 2016), இங்கிலாந்து (டிசம்பர் 2016), பங்களாதேஷ் (பிப்ரவரி 2017), இலங்கை (நவம்பர் 2017), இலங்கை (டிசம்பர் 2017), தென்னாப்பிரிக்கா (அக்டோபர் 2019) மற்றும் இலங்கைக்கு எதிராக டெஸ்டில் இரட்டை சதங்களை அடித்தார்.

3. இந்திய கேப்டனாக அதிக ஒருநாள் ரன்கள் எடுத்தவர்

ரோஹித் ஷர்மா ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மூன்று இரட்டைச் சதங்களைப் பதிவு செய்துள்ளார், மேலும் ODIகளில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை 264 பதிவு செய்துள்ளார். இந்த இரண்டு சாதனைகளும் இன்றுவரை உடைக்கப்படாமல் உள்ளன.  இருப்பினும், இந்திய கேப்டனாக அதிக ஒருநாள் ரன்களை எடுப்பது சர்மாவுக்கு மிகவும் கடினமான பணியாகும். அனைத்து வடிவங்களிலும் நிலையான பேட்டராக இருந்தபோதிலும், விராட் கோலி கேப்டனாக 95 போட்டிகளில் விளையாடி 72.65 சராசரியுடன் 5449 ரன்கள் குவித்துள்ளார். எனவே, இந்தியாவின் ஒரு நாள் கேப்டனாக ரோஹித் சர்மா சாதிக்க முடியாத சாதனையாக இது இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *