இறைச்சி உண்பதில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவிப்பு!

வறட்சியான காலநிலையினால் கால்நடை இறைச்சியை உண்பதில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வறட்சியான காலநிலையுடன் விஷம் கலந்து விலங்குகளை வேட்டையாட சிலர் தூண்டப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டுகிறார்.

இவ்வாறான இறைச்சியை உண்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என உபுல் ரோஹன தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன,

“.. இந்த வறண்ட காலநிலையினால் வனவிலங்குகளுக்கு குடிப்பதற்கு மிகக்குறைவான தண்ணீர் உள்ளது, குறிப்பாக வில்பத்து, யால, உடவலவ போன்ற பாதுகாக்கப்பட்ட சரணாலயங்கள் மற்றும் காடுகளில் நீர் மிகவும் சிறிய இடங்களில் சேமிக்கப்படுகிறது.

இந்த வன விலங்குகளுக்கு விஷம் கலந்து தீ வைத்து கொல்வதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. குறிப்பாக மாத்தறை, அம்பாந்தோட்டை, புத்தளம், அநுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை பிரதேசங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும், அயல் பிரதேசங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த படுகொலை செய்யப்பட்ட வனவிலங்குகளின் இறைச்சி சிறந்த இறைச்சியாக விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பாக இந்த வகையான விஷத்தை வைத்து கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியை சாப்பிட்டால், நீங்கள் உடனடியாக இறந்துவிடலாம். மேலும் சில உடல் உபாதைகள் ஏற்படலாம். மற்றும் நீண்டகால கோளாறுகள் ஏற்படலாம். எனவே, தெரியாத பகுதிகளுக்குச் செல்வதையும், இறைச்சி உண்பதையும் மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *