கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை செயல்பாட்டில் பாதிப்பு ஆய்வில் தகவல்!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் மூளை செயல்பாட்டில் பாதிப்பு இருக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய ஆய்வு ஒன்றில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சி மாணவர்கள் நடத்திய ஆய்வில், கொரோனா தொற்று நீண்டகால மூளை செயல்பாடு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது.

“கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடம் காலப்போக்கில் அவர்களின் மூளை செயல் திறன் எவ்வாறு மாறியது என்பதை தெரிந்து கொள்ள ஆய்வு செய்யப்பட்டது. இதில் கொரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு சில நபர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் அவர்களின் மூலை செயல்பாடுகள் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.

பணிகளில் கவனம் செலுத்துவது, நினைவு கூறும் திறன் அல்லது பேசும்போது சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்து பேசுவது போன்ற அறிவார்ந்த செயல்பாடுகள், கொரோனா தொற்றுக்குப் பிறகு சிரமமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த அறிகுறிகளை ஆய்வாளர்கள் Brain Fog என்று அழைக்கிறார்கள்.

அதாவது அதிகமான வேலைப் பளு, மன அழுத்தம், தூக்கமின்மை, அதிக நேரம் கணினி பயன்படுத்துதல் போன்றதால் ஏற்படும் கவனக்குறைவு, குழப்பம், மறதி மனத்தெளிவின்மை ஆகியவையே Brain Fog எனப்படுகிறது. இவை கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் ஆனவர்களிடமும் பொதுவாகக் காணப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *