தந்தை மற்றும் மகனின் விக்கெட்டை வீழ்த்தி சாதனைப் படைத்தார் அஸ்வின்!

தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இந்திய அணிக்காக 92 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். டெஸ்டில் 474 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஐசிசி டெஸ்ட் பௌலர் தரவரிசையில் முதலிடத்திலும் ஆல்ரவுண்டர் பட்டியலில் 2 வது இடத்திலும் இருக்கிறார்.

இந்திய அணி தற்போது மே.இ.தீவுகள் சுற்றுப்பயணம் செய்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. நாணய சுழற்சியை வென்ற மே.இ.தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

தற்போது, டேகனரின் சந்திரபால் விக்கெட்டினை அஸ்வின் எடுத்துள்ளார். இவரது அப்பாவான ஷிவ்நரைன் சந்திரபால் விக்கெட்டினையும் 2011 இல் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தந்தை, மகன் விக்கெட்டினை எடுத்து அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *