ஒட்டிப்பிறந்த சிசுக்களைப் பிரித்தெடுத்து சாதனைப் படைத்த சவுதி வைத்தியர்கள்!

ஒட்டிப்பிறந்த சிசுக்களைப் பிரித்தெடுப்பதென்பது ஒரு சாதாரண விடயமல்ல. அதுவும் அதற்கான நீண்டநேர சத்திரசிகிச்சைகளை இலவசமாக மேற்கொள்வதென்பது; மனிதநேயமுள்ளவர்களால் மாத்திரமே முடியும்.

ஒட்டிப்பிறக்கும் இரு மனித சிசுக்களின் உடல்களை வெவ்வேறாகப் பிரித்தெடுக்கும் பொழுது அங்கே மனித உடல் சம்பந்தப்பட்ட அனைத்து துறைசார் வைத்திய நிபுணர்களும் சத்திரசிகிச்சையின் பொழுது பிரசன்னமாகியிருக்க வேண்டும். பற்பல வைத்திய நிபுணர்கள் ஒன்றாக எட்டு பத்து மணித்தியாலங்கள் போராடி;  இரு உயிர்களையும் மீட்டெடுப்பததற்கு உண்மையிலேயே சிலாகித்துக் கூறவேண்டிய விடயமாகும்.

அவ்வாறு ஒட்டிப்பிறந்த குழந்தைகளை இலவசமாகப் பிரித்து வாழ்வளிக்கும் ஒரே மனிதநேய நாடாக சவூதி அரேபியா திகழ்கிறது.

ஸிரிய நாட்டைச் சேர்ந்த “பஸ்ஸாம்” “இஹ்ஸான்” எனும் ஒட்டிப்பிறந்த இரு குழந்தைகளையும் பிரித்தெடுக்கும்; ஏழரை மணிநேர சத்திரசிகிச்சை நேற்று (6-7-2023) வெற்றிகரமாக சவூதி அரேபிய ரியாத் நகரில் மேற்கொள்ளப்பட்டது.

சத்திரசிகிச்சையினை  வழமைபோன்று பேராசிரியர் அப்துல்லாஹ் அர்-ரபீஆ தலைமைதாங்கினார். அதனை அருகில் உள்ள தியேட்டரில் இருந்து பெற்றோர் நேரடியாக வீடியோ மூலம் பார்த்துக்கொண்டிருந்தனர். சத்திரசிகிச்சையின் பின்னர் தற்பொழுது இரு குழந்தைகளும் நலமாக உள்ளனர் என பேராசிரியர் அர்-ரபீஆ அவர்கள் செய்திச் சேவைகளுக்கு பேட்டியளிக்கும் பொழுது தெரிவித்தார்.

சுமார் 33 முப்பத்திமூன்று வருடகாலமாக இச் சேவையினை சவூதி அரேபியா மேற்கொள்கிறது. இதுவரை 23 நாடுகளைச் சேர்ந்த 131 ஒட்டிப்பிறந்த ஜோடிகளை சவூதி அரேபிய இலவசமாகப் பராமரிக்கின்றது. அவற்றில் 57 ஆவது வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஜோடிகளாக நேற்றைய;  “பஸ்ஸாம்” “இஹ்ஸான்” எனும் குழந்தைகள் பதிவாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *