உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறிய உலக செம்பியன்!

2023 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்துள்ளது.

இன்று (01) இடம்பெற்ற ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஸ்கொட்லாந்து அணி ஏழு விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான தகுதிப் போட்டியின் சூப்பர் சிக்ஸ் சுற்றின் மற்றுமொரு முக்கிய போட்டியாக இந்த போட்டி இன்று நடைபெற்றது

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட மேற்கு அணிக்கு வாய்ப்பளித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஓவர்கள் 5 பந்துகளில் 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, ஸ்காட்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக 182 ஓட்டங்களை நிர்ணயித்திருந்தது.

182 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 43 ஓவர்கள் 3 பந்துகள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பதிவு செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *