நடிகர் ரஜினி,விஜய் முதல் தோனி,கோலி வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

 

டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் சமீபத்தில் சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை தன்வயப்படுத்தினார்.

அதன் பின்னர் டுவிட்டர் நிறுவனத்தில், பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர்.

இதில் உள்ள கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

இந்தக் குறியீட்டின் மூலம், குறிப்பிட்ட பயனர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் கட்டணம் வசூலிப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 20ம் திகதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மாத சந்தா செலுத்தாத ட்விட்டர் கணக்குகளின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விளையாட்டு பிரபலங்களான விராட் கோலி, தோனி, ரோகித் சர்மா, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், நடிகர் விஜய், ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் ப்ளூ டிக் பறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *