PRIYANKA CHOPRA உடன் இணைகிறார் JOHN CENA

விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான பிரியங்கா சோப்ரா, 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்ச WWE நாயகன் ஜோன் சீனாவுடன் தனது அடுத்த படத்தில் இணையப்போகிறார்.

90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்ச ஆக்‌ஷன் நாயகன் ஜோன் சீனாவுடன் தனது அடுத்த படத்தில் இணையப்போவதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த டெட்லைன் என்ற பத்திரிகையின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்துகொண்டார்.

விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. அதன் பிறகு இந்தி படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

பாலிவுட் சினிமாவில் இருந்த அரசியலால் அங்கிருந்து விலகியதாக சமீபத்திய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

ஆங்கில பாடல்கள், மியூசிக் வீடியோக்கள் மூலம் ஹொலிவுட்டில் கால்தடம் பதித்த பிரியங்கா சோப்ரா படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் வழியாக அங்கும் புகழ்பெற்றவராக உயர்ந்தார்.
பிரியங்காஜோன் சீனாவுடன் இணையும் செய்தி அவருடைய ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஜோன் சீனா ஒரு ரெப் பாடகராக தொடங்கி WWE மல்யுத்தத்தில் பிரபலமடைந்தார்.
WWE உலகில் மிகவும் அதிக ரசிகர்களைக் கொண்ட வீரர் என்ற புகழ் அவருக்கு உண்டு. அதிக சாம்பியன்ஷிப்களை வென்று ஹீரோவாக திகழ்கிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *