தன்னுடைய நிர்வாணப் படத்தை திருடிய தந்தையை கொலை செய்த மகள்!

அமெரிக்காவில் மகளின் நிர்வாண புகைப்படத்தை கணினியின் திரையில் முகப்பு படமாக வைத்து இருந்த வளர்ப்பு தந்தையை மகளே மூச்சிரைக்க வைத்து கொலை செய்து இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ பகுதியில் உள் அலங்கார வடிவமைப்பு நிறுவனத்தை(interior design company) நடத்தி வரும் ஜேட் ஜாங்க்ஸ்(39) என்ற பெண், அவரது சொந்த வளர்ப்பு தந்தை தாமஸ் மெரிமனை(64) டிசம்பர் 31ம் திகதி பிளாஸ்டிக் பை கொண்டு மூச்சிரைக்க செய்து கொலை செய்த வழக்கில் நீதி விசாரணையில் உள்ளார்.

வளர்ப்பு தந்தையான தாமஸ் மெரிமனின் வீட்டில் தன்னுடைய பல திருடப்பட்ட நிர்வாணப் புகைப்படங்களை பார்த்த ஜேட் ஜாங்க்ஸ் அதிர்ச்சி அடைந்துள்ளார், அத்துடன் தாமஸ் மெரிமனின் கணினி திரையின் முகப்பு படமாக தன்னுடைய நிர்வாண புகைப்படம் இருப்பதை பார்த்து கடும் கோபம் அடைந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜேட் ஜாங்க்ஸ் வளர்ப்பு தந்தையை அதிகப்படியான தூக்க மாத்திரைகளை உட்கொள்ள வைத்து, பிளாஸ்டிக் பை கொண்டு கழுத்தை நெரித்ததுடன் மட்டுமல்லாமல் மூச்சிரைக்க வைத்து கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ஜேட் ஜாங்க்ஸின் தாய் கடந்த 2008ம் ஆண்டே உறவு துஷ்பிரயோகம் காரணமாக  தாமஸ் மெரினை விவாகரத்து செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேட் ஜாக்ங்ஸ் அவரது வளர்ப்பு தந்தையை கொலை செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் நிலையில், இது தொடர்பான வழக்கு நீதி விசாரணைக்கு முன்வந்துள்ளது.அதில் ஜேட் ஜாங்க்ஸ் தரப்பில் வழக்கை எதிர்கொள்ளும் வழக்கறிஞர் மார்க் கார்லோஸ், என்சினிடாஸில் உள்ள ஒரு பிரபலமான பட்டாம்பூச்சி பண்ணையின் இணை நிறுவனர் தாமஸ் மெரிமன், உடல்நலக்குறைவு மற்றும் அவரது சொந்த காக்டெய்ல் தூக்க மாத்திரைகள் காரணமாக இறந்துள்ளார் என வாதிட்டுள்ளார்.

அத்துடன் ஜேட் ஜாங்க்ஸ் மற்றும் தாமஸ் மெரிமன் இடையிலான உறவு மிகவும் ஆழமானது, இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்துள்ளனர் என தெரிவித்தார்.இதற்கிடையில் இந்த வழக்கில் வாதிட்ட துணை மாவட்ட வழக்கறிஞர் ஜார்ஜ் டெல் போர்ட்டிலோ, ஜேட் ஜாங்க்ஸ் தனது வளர்ப்பு தந்தையை கொன்று அதை அப்புறப்படுத்துவது தொடர்பாக நண்பர்களுடன் உரையாடல் நடத்தியது தொடர்பான அறிக்கைகள் இருப்பதாக வாதிட்டார்.

இந்நிலையில் வளர்ப்பு தந்தையை கொலை செய்து தொடர்பான ஜேட் ஜாங்க்ஸின் வழக்கில், அவர் $1 மில்லியன் ஜாமீனில் ஜிபிஎஸ் அங்கிலெட்டுடன் விடுவிக்கப்பட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *