அரச வேலையை தக்க வைத்துக் கொள்ள குழந்தையை கொன்ற தம்பதி!

நபர் ஒருவர்  அரச  வேலை வாய்ப்பினைத் தக்க வைத்துக் கொள்வதற்காக  தனது குழந்தையைக்  கால்வாயில் வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்ஸ்தானில் அரச துறையில் ஒப்பந்த ஊழியராகப்  பணியாற்றி வருபவர் ‘ஜவர்லால் மேக்வால்‘. 36 வயதான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளநிலையில் அவரது மனைவி மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார்.

அம்மாநிலத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தவுடன் அரச ஊழியர்கள் கட்டாயமாக  ஓய்வு பெறவேண்டும் என்ற சட்டம் அமுலில் உள்ளதால், அந்நபர் ‘தனது நிரந்தர வேலையை இழந்துவிடுவோமோ?‘  என்ற அச்சத்தில் கடந்த 22 ஆம் திகதி  தனது 5 மாத பெண் குழந்தையை அப்பகுதியில் உள்ள கால்வாய்யொன்றில் வீசிச் சென்றுள்ளார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் குறித்த குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த தம்பதியினரைக் கைது செய்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *