தலிபான்களுக்கு ஈரான் எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு அண்டை நாடான ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆகஸ்ட் 15ம் திகதி ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியோடியதை அடுத்து, தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இன்னும் சில நாட்களில் அரசு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தலிபான் வெளியிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு சீனா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. எனினும், பல நாடுகள் தலிபானை ஆட்சியை விரும்பவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், தலிபான்களுக்கு அண்டை நாடான ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

அல்போர்ஸ் மாகாணத்திற்கான ஈரான் உச்ச தலைவரின் பிரதிநிதி Ayatollah Mehdi Hamedani-யே தலிபானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தலிபான்களுக்கும், தற்போது இருக்கும் தலிபான்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

ஈரானுக்கு எதிராக செயல்பட நினைத்தால், ஐ.எஸ்-க்கு ஏற்பட்ட கதி தான் அவர்களுக்கும் ஏற்படும் என்பதை தலிபான்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என Ayatollah Mehdi Hamedani எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *