பிரான்ஸில் பிறந்த தங்க குரங்கு குட்டிகள்!

பிரான்ஸ் தலைநகர் பரிசில் உள்ள மிருகக்காட்சிச்சாலை ஒன்றில் தங்க குரங்கு என அழைக்கப்படும் குரங்கு ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது.

பரிசில் உள்ள Jardin des Plantes மிருகக்காட்சிச்சாலையில் இச்சம்பவம் கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன்னர் குட்டிகளை ஈன்றிருந்தாலும் இது தொடர்பான தகவல்களை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் zoo du Muséum national dhistoire naturelle அமைப்பு நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.

Marmoset இன குடும்பத்தைச் சேர்ந்த இந்த இவ்வகை குரங்குகள் பொன் நிறத்தில் காட்சியளிக்கும்.

இதனாலேயே இவ்வகை குரங்குகள் தங்க குரங்கு என அழைக்கப்படுகிறது. வடக்கு அமெரிக்க காடுகளை பூர்வீகமாக கொண்ட இந்த குரங்கு பிரான்சில் குட்டி ஈன்றுவது மிக அரிதான செயலாகும். இதனை சுட்டிக்காட்டிய மேற்படி அமைப்பு, பரிசின் Jardin des Plantes மிருகக்காட்சிச்சாலையில் உள்ள அவ்வகைக் குரங்கு ஒன்று இரு குட்டிகளை ஈன்றுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த குரங்கு குட்டிகளுக்கு முதலில் மிக அதிகமான புரதம் கொண்ட பால் ஊட்டப்பட்டதாகவும், தற்போது நான்கு மாதங்கள் வயதை நெருங்கும் குட்டிகள் மிகுந்த ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியவகை உயிரினமாக இக்குரங்குகள் உலகம் முழுவதும் பாதுகாக்கப்படும் விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. 3,000 வரையான குரங்குகள் மட்டுமே உலகில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *