உலகின் அபூர்வமான மயில் சிலந்தி!

உலகின் மிகவும் அபூர்வமான மயில் சிலந்தியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிலந்தி ஆனது அனைத்து இடங்களிலும், வீட்டின் மூலை முடுக்குகளில் வலை பின்னி காணப்படும் ஒரு சிறிய உயிரினம் தான்.

அந்த சிலந்திகளில் ஏராளமான வகைகள் உள்ளன. அதேபோல பெரியவகை சிலந்திகள் டிராண்டுலா என்று அழைக்கப்படுகின்றன.

சிலந்திகளில் சில குறிப்பிட்ட வகை இனங்கள் சிறிய பல்லிகள், தவளைகள் மற்றும் பறவைகளை உணவாக உட்கொள்ளும் அளவு வல்லமை படைத்தவை.

இந்தியாவின் ஆந்திராவில் காணப்படும் மயில் சிலந்திகள் மிகவும் அரியவகை சிலந்திகள் எனக்கூறப்படுகிறது. சிலந்தி இனங்களிலேயே நீல நிற உரோமங்கள் இந்த மயில் சிலந்திகளுக்கு மட்டுமே காணப்படுகின்றன.

இதுவே, பிற சிலந்திகளிடம் இருந்து இவற்றை வேறுபடுத்தி காட்டுகின்றன. மயில் சிலந்தி அல்லது Poecilotheria metallica என்று அழைக்கப்படும் இந்த வகை சிலந்திகள் மிகவும் பழைமை வாய்ந்த சிலந்தி இனமாகும்.

மேலும், மயில் சிலந்திகளில் உள்ள ஆண் இனங்கள் வயதாக ஆக அவற்றின் உடம்பில் உள்ள நீல நிறத்தின் அடர்த்தி குறையும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பெண் சிலந்திகள் பொதுவாக 11 முதல் 12 ஆண்டுகள் வரை வாழுமாம். அரிதாக சில பெண் சிலந்திகள் 15 ஆண்டுகள் வரை கூட வாழலாம் எனவும், ஆண் சிலந்திகள் 3 முதல் 4 ஆண்டுகள் வரை வாழும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த வகை, சிலந்திகள் கடித்தால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு மிகவும் குறைவு என்றாலும் கடுமையான தலைவலி, உடல் வலி, வீக்கம் மற்றும் தசை பிடிப்புகள் ஏற்படலாம் என ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *