எலான் மஸ்கின் முடிவால் அதிர்ச்சியில் டெஸ்லா ஊழியர்கள்!

பொருளாதாரம் பற்றி தனக்கு மிக மோசமான உணர்வு இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியும்,

உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவதாக அறிவித்தது முதல் சர்வதேச அளவில் கவனம் பெறும் நபராக மாறினார்.

ஆனால் அந்த டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் பின்னர் நடைபெறவில்லை.

ஆனால் டுவிட்டரின் 9.2% பங்குகளை வைத்திருக்கும் அவர் தற்போது நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கிறார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன் டெஸ்லா நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் வாரத்திற்கு குறைந்தது 40 மணிநேரமாவது அலுவலகத்திற்கு வந்து வேலை பார்க்க வேண்டும் அல்லது நீங்கள் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது தனது ஊழியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

அதாவது பொருளாதாரம் பற்றி தனக்கு மிக மோசமான உணர்வு இருப்பதாகவும், டெஸ்லா நிறுவனத்தின் சுமார் 10% ஊழியர்களை குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகளவில் அனைத்து டெஸ்லா நிறுவனத்தின் பணியமர்த்தல்களை தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள் என்ற தலைப்பில் டெஸ்லா நிர்வாகிகளுக்கு அவர் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *