நாளொன்றுக்கு அதிகமாக உணவு எடுத்துக் கொள்ளும் நாடு!

உலகில் மிக அதிகமாக உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்ளும் நாடான அமெரிக்கா, சாப்பாட்டுப் பிரியர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தையே பெற்றுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பஹ்ரைன் முதலிடத்தில்

அமெரிக்காவில் வாழும் மக்கள் நாள் ஒன்றிற்கு சராசரியாக 3,868 கலோரிகள் அளவுக்கு உணவு எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டு மக்கள், சராசரியாக நாள் ஒன்றிற்கு 4,000 கலோரிகள் அளவுக்கு உணவு எடுத்துக் கொள்கின்றனர்.

உலகில் சாப்பாட்டுப் பிரியர்கள் மிகுந்த நாடுகளின் பட்டியலில் பஹ்ரைன் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 26வது இடத்தில் உள்ளது பிரித்தானியா. பிரித்தானிய மக்கள் நாள் ஒன்றிற்கு சராசரியாக 3,422 கலோரிகள் அளவுக்கு உணவு எடுத்துக் கொள்கின்றனர் என்றே தெரியவந்துள்ளது.

184 நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வில், 173 நாடுகளைச் சேர்ந்த மக்கள் சராசரியாக நாள் ஒன்றிற்கு 2,000 கலோரிகள் அளவுக்கு உணவு எடுத்துக் கொள்கின்றனர். இதனாலையே, அதிக கலோரிகள் அளவுக்கு உணவு எடுத்துக் கொள்வது உடல் பருமன் சிக்கலை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

1 பில்லியன் மக்கள்

1970 காலகட்டத்தில் உடல் பருமன் சிக்கலை எதிர்கொண்டவர்கள் எண்ணிக்கை 175 மில்லியன் என இருந்தது. ஆனால் தற்போது 1 பில்லியன் மக்கள் உடல் பருமன் சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் அல்சைமர் உள்ளிட்ட பாதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர். தொடர்புடைய பட்டியலில் இடம் பெற்றுள்ள பஹ்ரைன், அரேபிய தீபகற்பத்தில் செல்வ செழிப்பு மிக்க ஒரு குட்டி தீவு நாடு.

இங்குள்ள மக்களில் 10ல் நால்வர் தற்போது உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு ஆகியவையே காரணமாகவும் கூறப்படுகிறது.

சராசரியாக 2,000 கலோரிகள்

மூன்றாவது இடத்தில் அயர்லாந்தும் ( 3,850 கலோரிகள்), நான்காவது இடத்தில் பெல்ஜியம் (3,824), ஐந்தாவது இடத்தில் துருக்கி (3,762) மக்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த தரவுகள் என்பது ஒவ்வொரு நாட்டிலும் சராசரியாக ஒரு வீட்டிற்கு வாங்கப்பட்ட மொத்த உணவை அடிப்படையாகக் கொண்டது என தெரிவிக்கின்றனர்.

பொதுவாக, அமெரிக்க மக்கள் நாள் ஒன்றிற்கு சராசரியாக 2,000 கலோரிகள் அளவுக்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

பிரித்தானியாவை பொறுத்தமட்டில், பெண்கள் 2,000 கலோரிகள் அளவுக்கு நாள் ஒன்றிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், ஆண்கள் 2,500 கலோரிகள் அளவுக்கு சராசரியாக நாள் ஒன்றிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *