தொலைபேசி மற்றும் இணைய கட்டணங்கள் அதிகரிப்பு!

இலங்கையில் தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (வட் வரி) 12% ஆக நேற்று முன் தினம் முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது.
பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், தொலைத்தொடர்புகள் தீர்வை 15%ஆகவும் அதிகரிக்கப்படுமென மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே வரி அதிகரிப்பு காரணமாக தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
என்ற போதும் குறித்த கட்டண அதிகரிப்புக்கான விபரங்கள் தொடர்பிலான அறிவிப்புக்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *