38 மாதங்களே உள்ளன
தவறை திருத்திக் கொள்ளுங்கள் ராஜபக்ச ஜனாதிபதிக்கு கடிதம்!

கொவிட் தாக்கத்தின் முதலாம் சுற்றினை சிறந்த முறையில் வெற்றி கொண்டவர்கள் இன்று பொருத்தமான பதவியில் இல்லை. அதனால் நாடு தோல்வியடைந்துள்ளது.கொவிட் தாக்கத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டதன் விளைவை நாட்டு மக்கள் இன்று எதிர் கொள்கிறார்கள்.

நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை அறிய முடியவில்லை என உங்களின் சகோதரர்கள் குறிப்பிடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஆகவே 38 மாத காலமே இன்னும் மிகுதியாகியுள்ளது. தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். “சேர் பெய்ல் “ என்று நாட்டு மக்கள் ஏன் குறிப்பிடுகிறார்கள். என்பதை சற்று பொறுமையுடன் சிந்தியுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ பல கேள்விகளை முன்வைத்து தனது முகப்பு புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபயவிற்கு திறந்த கடிதம் எனத் தெரிவித்து அவர் மேற்கண்டவாறு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நீங்கள் எனது தலைவர் மட்டுமல்ல, நாட்டின் 22 மில்லியன் மக்களின் அரச தலைவரும் கூட. உங்களை காயப்படுத்தினாலும் பரவாயில்லை. நான் நாடு மற்றும் மக்களைப் பற்றி பேசினேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் நான் உங்களை தேர்ந்தெடுத்து ஆட்சி அமைக்க உதவினேன்.

நான் கடந்த முறை சொன்னது போல், நீங்கள் காயப்படுத்தப்படலாம். உண்மையை பேசுவது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு. சில சனல்கள் கூட தரப்பு உண்மையைச் சொல்கிறது என்று கூறுகின்றன. எனினும், உங்கள் அமைச்சர்கள் என்னிடம் அமைச்சு இல்லாததால் வருத்தமடைந்ததாக கூறினர். நீங்கள் இந்த உலகில் வாழும் குறுகிய காலத்தில் பொறுப்புகள் இல்லாமல் சுதந்திரமாக வாழ்வது எவ்வளவு அதிர்ஷ்டம்?

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் சைட்டம் பிரச்சினை தோற்றம் பெற்று 3 ஆண்டு காலமாக இப்பிரச்சினை நாட்டை சீரழித்தது. 410 போராட்டங்கள் இப்பிரச்சினைக்காக முன்னெடுக்கப்பட்டன. நான் இப்பிரச்சினைக்கு ஒரு வார காலத்தில் தீர்வு வழங்கினேன்.

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் பண்டிகை உலகில் இடம் பெறும் சிறப்பான பௌத்த பண்டிகையாகும். 74 நாடுகள் பங்குபற்றின. நாம் சர்வதேசத்தின் நன்மதிப்பை வெற்றி கொண்டோம். மேலும், நான் அமைச்சு பதவியினை ஐந்து முறை நிராகரித்துள்ளேன். ஒரு முறை அமைச்சு பதவியை துறந்துள்ளேன். நான் யாரையும் பழிவாங்கவில்லை. பழிவாங்குவதாக இருந்தால் எனது வீட்டுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்களை பழிவாங்கியிருக்க வேண்டும். நீங்களும் வெலிக்கடை சிறை செல்லாமல் தப்பித்ததும் அதனால் தான் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *