இலங்கை மன்னர்களின் மகுடங்களை கழற்றிய இளைஞர்கள்!

சுவர்களில் ஓவியங்களை வரைந்து நாட்டை அழகுப்படுத்துவோம் என நாங்கள் முகநூலில் பதிவு ஒன்றை இட்டோம். நாங்கள் தன்னார்வளர்களுக்கு தகவல் அனுப்பினோம். அப்படித்தான் சுவர்களில் ஓவியம் வரைவது ஆரம்பமானது.

நாட்டை அழகுபடுத்த வேண்டியது அரசாங்கம் தானே என சிலர் எங்களிடம் கேள்வி எழுப்பினர். நீங்கள் ஏன் செலவு செய்து சிரமப்படுகிறீர்கள் என கேட்டனர். இந்த எதிர்மறை விமர்சனங்களுக்கு நாங்கள் கூறும் ஒரே பதில், இது எங்களது நாடு. இது எங்களது கடமை. நாங்கள் எங்களை நம்புகிறோம். நாங்களே மாற்றத்தை செய்ய வேண்டும்”

இது கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகி மக்கள் பட்டாசுகளை கொளுத்திக் கொண்டிந்த போது, வீதியில் இறங்கி சுவர்களில் ஓவியங்களை வரைந்த இளைஞர், யுவதிகளுக்கு மத்தியில் இருந்த இளைஞர் ஒருவர் டெய்லி நியூஸ் பத்திரிகையிடம் கூறிய கதை.

நாடு முழுவதும் இளைஞர்கள் சுவர்களில் ஓவியங்களை வரை ஆரம்பித்த நடவடிக்கை அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இலங்கையில் எந்த தேர்தல் முடிவுக்கு பின்னர் இப்படியான ஒரு அலை ஏற்பட்டதில்லை என்பதே இதற்கு காரணம்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றி பெற்ற களிப்பில் இருந்த கோட்டாபய ராஜபக்ச டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டு, இளைஞர், யுவதிகளின் படைப்பாற்றலை பாராட்டியதுடன் நாட்டை உருவாக்க அவர்களின் சேவை அவசியம் எனக் கூறியிருந்தார்.

இளைஞர், யுவதிகள் தமது ஓவியங்கள் மூலம் கோட்டாபயவின் வெற்றிக்கு வழங்கிய பங்களிப்பை காண்பித்தனர். 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவை வெற்றி பெற செய்ய இந்த இளைஞர், யுவதிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் புரட்சியை செய்தனர்.

இந்த புரட்சிக்கு உரிமை கோருவதற்காக அவர்கள் பாரம்பரிய கட்சியினர் போல் பட்டாசுகளை கொளுத்தவில்லை. அவர்கள் வீதியில் இறங்கி தமது செலவில் நிறப்பூச்சுகளை கொள்வனவு செய்து, சுவர்களில் ஓவியங்களை வரைந்தனர்.

எனினும் கோட்டாபய ராஜபக்ச தனக்கு இந்த வெற்றியை பெற்றுக்கொடுத்த இளைஞர், யுவதிகளுக்கு மகுடம் சூட்டவில்லை. அவர் தனது ராஜபக்ச குடும்பத்தினருக்கே மகுடம் சூட்டினார்.

ராஜபக்ச குடும்பத்தின் முடிக்குரிய இளவரசர் நாமல் ராஜபக்சவுக்கு ஒரு அமைச்சு பொறுப்பல்ல, பல அமைச்சு பொறுப்புகளை வழங்கினார். ஏனைய அமைச்சுக்களை கண்காணிக்கும் பொறுப்பையும் வழங்கினார்.

அப்போது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ போன்றவர்கள், நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என பேச ஆரம்பித்தனர்.

கோட்டாபய, பிரதமர் பதவியையும் நிதியமைச்சர் பதவியையும் அண்ணன் மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கினார். 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடாத பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குள் வருவதற்காக 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து, இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாக இருந்த தடையை நீக்கினார்.

நிதியமைச்சு பதவியை குடும்பத்தினருக்கு வெளியில் வழங்கப் போவதில்லை என காண்பிக்கும் வகையில் நிதியமைச்சை பசில் ராஜபக்சவுக்கு வழங்கினார். அதேபோல் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சு பதவியை அண்ணன் சமல் ராஜபக்சவுக்கு வழங்கினார்.

கமத்தொழில் ராஜாங்க அமைச்சர் பதவியை சமல் ராஜபக்சவின் புதல்வர் சஷீந்திர ராஜபக்சவுக்கு வழங்கி, அவரை முடிக்குரிய இளவரசராக மாற்றினார். பசில் ராஜபக்ச நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், பசில் ஜனாதிபதியாக பதவிக்கு வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என பசிலுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூற ஆரம்பித்தனர்.

வரவு செலவுத் திட்டத்தில் கூடுதலான நிதி ராஜபக்ச குடும்பத்தினர் வகிக்கும் அமைச்சுக்களின் நிறுவனங்களுக்கே ஒதுக்கப்பட்டன. சுவர்களின் ஓவியங்களை வரைந்த இளைஞர், யுவதிகள் இது பற்றி அருவருப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள் படிப்படியாக ராஜபக்ச குடும்பத்தினரை சமூக ஊடகங்கள் வாயிலாக விமர்சிக்க ஆரம்பித்தனர். கோட்டாபய ராஜபக்ச, ராஜபக்ச குடும்பம் மற்றும் அந்த குடும்பத்திற்கு நெருக்கமான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, அவர்களுக்கு எதிராக, மைத்திரி – ரணில் அரசாங்கம் தாக்கல் செய்திருந்த ஊழல், வழக்குகளில் இருந்து விடுதலை செய்ய ஆரம்பித்தார்.

இதன் காரணமாகவே சுவர்களில் ஓவியம் வரை இளைஞர், யுவதிகளின் பொறுமை எல்லை மீறியது. அவர்கள் சமூக ஊடகங்களில் கோட்டாபயவுக்கு எதிர்ப்பை வெளியிடும் போது, அவர் அதனை வேறு விதமாக புரிந்துகொண்டார்.

எதிர்க்கட்சியினர் சமூக ஊடகங்கள் வாயிலாக தனக்கு எதிராக சேறுபூசும் பிரசாரங்களை முன்னெடுப்பதாக அவர் கூறினார். அத்துடன் அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தனது விம்பத்தை அழிக்க சூழ்ச்சி செய்வதாகவும் கூறினார்.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் திகதி கோட்டாபய டுவிட்டரில் பதிவு ஒன்றை இட்டு, சுவர்களில் ஓவியம் வரைந்த இளைஞர், யுவதிகள் பற்றி இவ்வாறு கூறியிருந்தார்.

“ எமது எதிர்காலத்தை மாற்றியமைக்க எமது இளைஞர், யுவதிகள் வலுவான அடித்தளத்தை இட்டுள்ளனர். அவர்களின் தலைமைத்துவம், முயற்சி, அணிதிரளும் உணர்வு அந்த அடித்தளத்திற்குள் இருக்கின்றது. அதனுடன் படைப்பாற்றலும் இணைந்து நேர்மறையான சக்தி உருவாகி வருகிறது. இந்த இளைஞர், யுவதிகள் குறித்து பெருமைப்படுகிறேன்” எனக் கூறியிருந்தார்.

இப்படி கூறிய கோட்டாபய ராஜபக்ச, இளைஞர், யுவதிகள் தனக்கு அணிவித்த மகுடத்தை ராஜபக்ச குடும்பத்தினருக்கு சூட்டினார். மகுடத்தை சூட்டிய இளைஞர், யுவதிகள் சமூக ஊடகங்கள் வாயிலாக அவரது மகுடத்தை கழற்ற முயற்சித்தபோது கோட்டாபய ஆத்திரமடைந்தார்.

குருணாகல் அதிவேக நெடுஞ்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் புதுமையான கதை ஒன்றை சொன்னார். “ ஜோன்ஸ்டன் பேசும் போது எனது இரத்தம் கொதித்தது.” எனக் கூறினார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ என்பவர் ராஜபக்ச குடும்பத்தின் பாதுகாவலர். நாமல் ராஜபக்சவுக்கு முடிசூடுவதற்காக பாடுபடும் நபர். கோட்டாபயவை ஜனாதிபதி பதவிக்கு கொண்டு வர இளைஞர், யுவதிகள் இரத்தம் கொதிக்க சமூக ஊடகங்கள் வாயிலாக புரட்சி செய்தனர்.

அப்போது கோட்டாபயவுக்கு இரத்தம் கொதிக்கவில்லை. இந்த புரட்சியை விட காகத்தை அச்சுறுத்த காகம் ஒன்றை கொன்று தொங்க விட வேண்டும் என ஜோன்ஸ்டன் கூறிய கதைக்கு கோட்டாபயவின் இரத்தம் கொதித்தது.

அந்த இடத்தில் தான் கோட்டாபய தவறு செய்தார். எனினும் கோட்டாபயவுக்கு மகுடம் சூட்டி, சுவர்களில் ஓவியம் வரைந்த இளைஞர், யுவதிகளுக்கு தவறவில்லை.

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சுவர்களில் ஓவியம் வரைய சமூக ஊடகங்கள் வழியாக இளைஞர், யுவதிகளுக்கு அழைப்பு விடுத்த அதே இளைஞர், யுவதிகள், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கோட்டாபய மற்றும் ராஜபக்ச என்ற பெயர்களை அழிக்க வீதிக்கு வருமாறு இளைஞர், யுவதிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.

தாம் கோட்டாபயவுக்கு அணிவித்த மகுடத்திற்கு உரிமை கோருவதற்காகவே ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் காலிமுகத் திடலுக்கு வந்தனர். கோட்டாபய ஆரம்பத்தில் இதனை புரிந்துகொள்ளவில்லை.

அவர், மிரிஹாவில் தனது வீட்டுக்கு அருகில் வந்த இளைஞர், யுவதிகள் மீது தாக்குதல் நடத்தினார். சிறையில் அடைத்தார். இளைஞர், யுவதிகளின் ஒரே ஊடகமான சமூக ஊடகங்களை தடை செய்தார்.

இலங்கையில் எதிர்க்கட்சிகளின் அரசியல்வாதிகள் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டால், அவர்களை அச்சுறுத்த வழக்கு தாக்கல் செய்வது அல்லது சிறையில் அடைப்பது சம்பிரதாயமானது. இப்படி செய்யும் போது எதிர்க்கட்சியினர் அச்சமடைவார்கள்.https://googleads.g.doubleclick.net/pagead/ads?us_privacy=1—&client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=3417100113&adf=3754281347&pi=t.aa~a.3987527503~i.37~rp.4&w=372&fwrn=7&fwrnh=100&lmt=1651238116&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=7505841888&psa=1&ad_type=text_image&format=372×280&url=https%3A%2F%2Ftamilwin.com%2Farticle%2Fgadafi-libiya-revaluation-youth-protest-1651218022&fwr=0&pra=3&rh=310&rw=372&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1651238107346&bpp=14&bdt=7968&idt=14&shv=r20220427&mjsv=m202204260101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D88f37f5456ee180e-222f42a67ed20076%3AT%3D1629566544%3ART%3D1651238104%3AS%3DALNI_MbuCMYa_3MzunMtXbkER8YxmZX4rA&prev_fmts=0x0%2C372x280%2C372x280%2C412x787%2C372x814&nras=6&correlator=2771156613884&frm=20&pv=1&ga_vid=1967251774.1629566541&ga_sid=1651238105&ga_hid=1590956244&ga_fc=1&ga_cid=967309685.1651101680&u_tz=330&u_his=3&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=20&ady=6642&biw=412&bih=787&scr_x=0&scr_y=1178&eid=44759875%2C44759926%2C44759842%2C31067302%2C31060475&oid=2&pvsid=1640605918467817&pem=990&tmod=670580103&uas=3&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&ifi=7&uci=a!7&btvi=4&fsb=1&xpc=OqbDFxZPmy&p=https%3A//tamilwin.com&dtd=9212

இலங்கையின் ஊடகம் ஒன்று ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தை விமர்சித்தால், அந்த ஊடகத்திற்கு அரச விளம்பரங்கள் வழங்கப்படாது என்பதுடன் ஊடகத்தின் உரிமையாளர் அச்சுறுத்தப்படுவது வழமையானது.

கோட்டாபய, இளைஞர், யுவதிகளுக்கு இவை இரண்டையும் செய்தார். மிரிஹானைக்கு வந்த இளைஞர், யுவதிகளை தாக்கி கைது செய்து, சமூக ஊடகங்களை தடை செய்தார். ஆனால், இளைஞர், யுவதிகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் போல் அச்சமடையவில்லை.

மாறாக அவர்கள் கோட்டாபயவை வீட்டுக்கு அனுப்பி வைக்க காலிமுகத் திடலில் ஒன்றுக் கூடினர். கோட்டாபய பயந்து போனார். அவர் தனது ஜனாதிபதி பதவியை பாதுகாத்துக்கொள்ள, மகிந்தவை பிரதமர் பதவியில் வைத்துக்கொண்டு, ராஜபக்ச குடும்பத்தை அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.

பேசும் போது இரத்தம் கொதிக்கின்றது என்றுக் கூறிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார். ராஜபக்ச குடும்பத்தின் முடிக்குரிய இளவரசர் நாமல் ராஜபக்ச அமைச்சு பதவியை இழந்தது மட்டுமல்லாது, அச்சத்தில் தனது மனைவி மற்றும் குடும்பத்தை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைத்தார்.

ஜனாதிபதியாக பதவிக்கு வருவார் என ஆரூடம் கூறப்பட்ட பசில் ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏனைய ராஜபக்சவினர் வீடுகளில் ஒளிந்துகொண்டனர். கடந்த காலங்களில் சித்திரை புத்தாண்டை விமர்சையாக கொண்டாடும் ராஜபக்ச குடும்பத்தினர் இம்முறை புத்தாண்டை கொண்டாடவில்லை.

காலிமுகத் திடல் இளைஞர், யுவதிகள் ராஜபக்சவினர் மற்றும் ராஜபக்சவினருக்கு குடைபிடிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ரி 56 ரக துப்பாக்கியையோ, வாக்குகளையோ காட்டி அச்சுறுத்தவில்லை.

தமது கைகளில் இருக்கும் செல்லிடப் பேசிகளின் வட்ஸ் அப் செய்தி மூலம் இவர்களை அச்சுறுத்தினர். ரி 56 ரக துப்பாக்கிக்கு பதிலாக வட்ஸ் அப் மூலம் புரட்சி செய்யும் இளைஞர், யுவதிகளுக்கு எதிராக ராஜபக்சவினர் ரி 56 ரக துப்பாக்கியை பயன்படுத்தினர்.

இதன் மூலம் நீங்களும் ரி 56 ரக துப்பாக்கியை கையில் எடுங்கள் என்று ராஜபக்சவினர், இளைஞர், யுவதிகளுக்கு மறைமுக செய்தியை வழங்கியுள்ளனர். றம்புக்கணயில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி, ராஜபக்சவினர், காலிமுகத் திடலில் இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு இந்த செய்தியையே வழங்கியுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு ராஜபக்சவினரின் நண்பரான லிபியாவின் கடாபிக்கு எதிராக சமூக வலைத்தள ஊடகங்கள் மூலம் ஏற்பட்ட புரட்சிக்கு எதிராக அவர் விளையாட ஆரம்பித்ததன் காரணமாகவே புரட்சியாளர்கள் ஆயுதங்களை கையில் எடுத்தனர்.

இறுதியில் கடாபிக்கு ஒழிய இடமில்லாமல் போனது. இளைஞர்கள், ஆயுதங்களை கையில் ஏந்திக்கொண்டு கடாபியை மாளிகையிலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தேடும் போது, கடாபி கைவிடப்பட்ட பாழடைந்த கட்டடம் ஒன்றில் ஒளிந்துகொண்டார்.

தொலைக்காட்சிகள், குளிரூட்டிகள், தொலைபேசிகள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என கடாபி கூச்சலிட்டப் போது, அவரது பாதுகாவலர்கள் வசதியான இடத்தை தேடி அவரை ஒளித்து வைக்க முயற்சித்தனர்.

அப்போது இளைஞர் சிலரிடம் கடாபி சிக்கினார். பாதுகாவலர்கள் தப்பியோடினர். கடாபி சீமெந்தால் கட்டப்பட்ட குழாய் ஒன்றுக்குள் மறைந்திருந்தார். இளைஞர்கள் அவரை வெளியில் இழுத்து போட்டு கற்களால் தாக்கி கொலை செய்தனர்.

“ எனக்கு இப்படி செய்ய நான் செய்த தவறு என்ன..?” இது கற்களால் தாக்கப்பட்டு இறக்கும் தருவாயில் நடுங்கியவாறு கடாபி கூறிய இறுதி வார்த்தைகள்.

அந்த காலத்தில் மகிந்த லிபியாவுக்கு சென்ற போது கடாபி, மகிந்தவின் தோள் மீது கையை வைத்துக்கொண்டு இராணுவ அணி வகுப்பை பார்வையிட்டார். நாமல், லிபியாவுக்கு சென்று கடாபியை கட்டித்தழுவினார்.

கடாபி கற்களால் தாக்கி கொலை செய்யப்படும் போது ராஜபக்சவினர் மகுடம் சூட்டிக்கொண்ட மன்னர்கள் போல் அரச மாளிகையில் இருந்தனர். அன்றும் ராஜபக்சவினர் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. 2015 ஆம் ஆண்டு தோல்வியிலும் அவர்கள் பாடம் கற்கவில்லை.

தற்போது இலங்கை அரசின் முடிக்குரிய இளவரசர்கள், இளவரசிகள், ராஜபக்சவினருக்கு பாடம் கற்றுக்கொடுக்க காலிமுகத் திடலுக்கு வந்துள்ளனர்.

இலங்கையில் தற்போது காலிமுகத் திடலில் இருக்கும் இளைஞர், யுவதிகள், கடந்த 2011 ஆம் ஆண்டு துனிசியா, எகிப்து, லிபியாவில் சமூக ஊடகங்கள் வழியாக நடத்தப்பட்ட புரட்சியின் போது பாடசாலை செல்லும் வயதில் இருந்த சிறுவர்கள்.

அவர்கள் தற்போது கையில் எடுத்திருக்கும் செல்போன் 2018 அல்லது 2019 ஆம் ஆண்டு கிடைத்திருக்கலாம். 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய முன்னணியை வெற்றி பெற செய்வதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர், யுவதிகள் புரட்சி செய்தது போல், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்காக இளைஞர், யுவதிகள் சமூக ஊடகங்கள் மூலம் புரட்சி செய்தனர்.

1970 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணியின் வெற்றிக்காக பாடுபட்ட இளைஞர், யுவதிகள் சிறிது காலத்திற்கு பின்னர் தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை உணர்ந்தனர். அதன் பிரதிபலனாக 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சி ஏற்பட்டது.

அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே நடந்தது. தற்போது காலிமுகத்திடல் இளைஞர், யுவதிகள் வட்ஸ் அப் மூலம் அதே ஏப்ரல் புரட்சியை மேற்கொண்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு ராஜபக்சவினர் தம்மை ஏமாற்றியமைக்காக இளைஞர், யுவதிகள் இதனை மேற்கொண்டுள்ளனர்.

வரலாற்றில் ஒரு சம்பவம் இரண்டு முறை நடப்பதில்லை. காலிமுகத் திடல் இளைஞர், யுவதிகளுக்கு 1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர், யுவதிகளுக்கு ஏற்படாது என்பது நிச்சயம்.

நன்றி ;கட்டுரையாளர்: உபுல் ஜோசப் பெர்ணான்டோ

மொழியாக்கம்: ஸ்டீபன் மாணிக்கம்         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *