உணவின் மூலம் பரவும் புதிய வைரஸ்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாகாணத்தில் அண்மையில் சேகரிக்கப்பட்ட Oysters  எனப்படும்  ஒருவகை சிப்பியினால் நோரோ (norovirus ) எனப்படும் ஒரு வைரஸ் தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடாவில் குறித்த சிற்பியைப் பயன்படுத்தித்  தயாரிக்கப்பட்ட  உணவானது அமெரிக்காவுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் 90 க்கும் மேற்பட்டவர்களும், கனடாவில் 280 பேருக்கும் மேற்பட்டவர்களும்  இவ் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும்  இச்சிற்பி உணவானது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமே தவிர,  உயிருக்கு  ஆபத்தை விளைவிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த உணவினை மக்கள் உண்ண வேண்டாம் என மக்களுக்கு அமெரிக்கா மற்றும் கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *