இரண்டு வருடங்களுக்கு வீடுகள் வாங்கத் தடை!

கனடாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், 2 வருடங்களுக்கு வீடுகள் வாங்கத் தடை விதிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளின்  விலை உயர்வால் ஏற்படும் பிரச்சனையைக் குறைக்கும் விதமாகவே கனடா அரசு இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் கனடாவில் 2 வருடங்களுக்கு வெளிநாட்டவர்கள் வீடு வாங்குவதற்குத்  தடைவிதிக்கப்படவுள்ளதுடன், தங்கள் வீட்டை ஓராண்டுக்குள் விற்பவர்களுக்கு அதிக வரி விதிக்கப்படவுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் வெளிநாட்டு மாணவர்களுக்கும், நிரந்தர உரிமம் பெற்றவர்களுக்கும் பல விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *