ரஷ்யர்களால் கடத்தி கொல்லப்பட்ட உக்ரேனிய கால்பந்து வீரரின் கடைசி பதிவு!

உக்ரைனில் ரஷ்ய துருப்புகளால் பெற்றோருடன் கடத்தி கொல்லப்பட்ட கால்பந்து வீரரின் கடைசி பதிவரை அவரது சகோதரி வெளியிட்டு கண்கலங்கியுள்ளார்.

உக்ரைனில் 40 நாட்கள் கடந்தும் ரஷ்ய துருப்புகளின் கொடூர தாக்குதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பெண் மேயர் ஒருவர் குடும்பத்துடன் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட நிலையில், காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.

அந்த மேயரின் மகனான 25 வயது Alexander Sukhenko என்பவர் கடைசியாக வெளியிட்ட பதிவு தற்போது அவரது சகோதரியால் வெளியிடப்பட்டுள்ளது.

பிராந்திய பாதுகாப்பு படையில் இணைத்துக்கொண்டு அப்பாவி மக்களுக்கு உதவ வேண்டும் என திட்டமிட்டிருந்துள்ளார் Alexander Sukhenko. இதனிடையே ரஷ்ய துருப்புகளால் துப்பாக்கிமுனையில், நகர மேயரும் தாயாருமான ஓல்கா மற்றும் தந்தையுடன் கடத்தப்பட, தமது சகோதரிக்கு கடைசியாக குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், அவர்கள் அம்மாவை கடத்திச் சென்றுள்ளனர் என பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, நாங்கள் பத்திரமாக இருக்கிறோம், ஆனால் மொபைல் இனி பயன்படுத்த முடியாமல் போகலாம் என இன்னொரு குறுந்தகவலையும் அனுப்பியுள்ளார்.

அதன் பின்னர் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை எனவும், ஆனால் பெற்றோருடன் கொல்லப்பட்ட நிலையில் காட்டுப்பகுதியில் சடலங்களை மீட்டுள்ளதாக Alexander Sukhenko-ன் சகோதரி குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 27ம் திகதியில் இருந்தே Alexander Sukhenko குடும்பமானது அப்பகுதி மக்களுக்காக போராடி வந்துள்ளனர். மேலும், தமது சகோதரரை வீட்டிடை விட்டு வெளியேற பலமுறை கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் இந்த இக்கட்டான நிலையில் பெற்றோரைவிட்டு தாம் வெளியேற விரும்பவில்லை என அவர் கூறியதாகவும் அவரது சகோதரி குறிப்பிட்டுள்ளார்.

மேயர் குடும்பத்தின் படுகொலை ரஷ்ய துருப்புக்களால் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களின் பெருகிவரும் சான்றுகளில் ஒன்று எனவும், இதில் கீவ்வுக்கு வெளியே உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களின் சாலையோரங்களில் சிதறிக் கிடக்கும் அப்பாவி மக்களின் சடலங்களும் அடங்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *