அழகு சாதனப் பொருட்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

கனடாவின் கால்கரி நகரில் பல அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவது தொடர்பில் கனடா சுகாதார அமைப்பான Health Canada எச்சரிக்கை விடுத்துள்ளது.

கால்கரி நிறுவனங்களின் தயாரிப்பான சில அழகு சாதனப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.பறிமுதல் செய்யப்பட்ட அழகு சாதனப்பொருட்களில், நீண்ட காலம் பயன்படுத்தினால் புற்றுநோயை உருவாக்கும் சில ரசாயனங்கள் முதல் பல்வேறு தோல் பிரச்சினைகளை உருவாக்கக்கூடிய பொருட்கள் வரை சேர்க்கப்பட்டுள்ளன.

பிரச்சினைக்குரிய தயாரிப்புகள் Brilliant Skin Essentials நிறுவனத்துக்குச் சொந்தமான Brilliant Rejuv line, Brilliant Rejuv Set, Topical Solution (Toner) மற்றும் Topical Cream ஆகியவையாகும்.

நான்காவது தயாரிப்பு ஒரு tretinoin கிரீம் ஆகும், அது முகப்பரு, தோல் சுருக்கம் மற்றும் முகத்தை ப்ரெஷ் ஆக்குவதற்காக இரவு நேரத்தில் பயன்படுத்தும் கிரீம் என விற்பனை செய்யப்படுகிறது.

மக்கள் இந்த தயாரிப்புகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறு கூறியுள்ள Health Canada அமைப்பு, ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தால் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *