இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுகிறது அமீரகம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரதிப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான சைஃப் பின் சயீத் அல் நஹ்யாவை அமைச்சர் சரத் வீரசேகர சந்தித்து, இலங்கைக்கு உதவுமாறு விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வீரசேகர விடுத்த அழைப்பிற்கு இணக்கம் தெரிவித்த பிரதிப் பிரதமர் சைஃப் பின் சயீத் அல் நஹ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வர்த்தக பிரதிநிதிகள் குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யும் எனவும் இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் உட்பட இலங்கைக்கு பயனளிக்கும் வகையிலான எட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட தயார் எனவும் உறுதியளித்துள்ளார்கள்.

அமைச்சர் வீரசேகர, அபுதாபியில் உள்ள வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராஜாங்க அமைச்சர் அஹமட் பின் அலி அல் சயேக்கையும் சந்தித்துள்ளார்.

அமைச்சர் வீரசேகர தலைமையிலான இலங்கைக் குழுவில் அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் நாரத சமரசிங்க, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மதுரங்க பெரேரா மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புச் செயலாளர் செயிட் அன்சார் மௌலானா, தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரொஹான் குணரத்ன உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *