Omicron தொற்றை கட்டுப்படுத்த அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம்!

ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து பரவும் Omicron என்ற வைரஸ் தற்போது உலக நாடுகளை பெரும் பதற்றத்திற்கு தள்ளியுள்ளது.

எனவே ஒவ்வொரு நாடும் Omicron பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே கிராம மக்கள் நூதன முயற்சியில் ஈடுபட்டனர்.

அதாவது,  Omicron தொற்றுப் பரவலைத் தடுத்திடவும், கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதற்காக கோவில் வளாகத்தில் பந்தக்கால் நட்டு வாழை மரம், தோரணங்கள் அமைத்து சீர்வரிசை கொண்டு வர வேத மந்திரங்களுடன் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து மகா தீபாரதனை நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜை செய்த புனித நீர் இரண்டு மரங்கள் மீதும் தெளிக்கப்பட்டது.

பின்னர் ஊர் பெரியவர்கள் திருமணத்திற்கு வந்தவர்கள் என அனைவரும் மொய்ப் பணம் வைத்தனர். திருமணம் நடைபெற்று முடிந்ததும் ஊர் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *