ஆடைத் துறையில் ஒன்றரை இலட்சம் பேர் வேலை இழப்பு!

2020 ஆம் ஆண்டில் கொவிட் தொற்று நோய் ஆரம்பித்த திலிருந்து ஏற்றுமதி ஆடைத் துறையில் சுமார் 150,000 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவைகள் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மாகஸ் கூறியுள்ளார்.

தொற்று நோய்க்கு முன்னர், ஆடைத் தொழிலில் 500,000 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். ஆனால் இப்போது சுமார் 350,000 பேர் வேலை செய்கிறார்கள் என்று கூட்டு ஆடைகள் மன்றத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக் கின்றன.

இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு தொழிலாளரும் வேலை இழக்க மாட்டார்கள் என்று அரசாங்கம் கூறியிருந்தாலும், சர்வதேசக் கொள்வனவாளர்கள் மற்றும் முதலாளிகள் ஊழியர்களின் சலுகைகளைக் குறைத்துள்ளனர். இதனால் வேலை இழப்பு ஏற்படுகிறது என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளதாக அன்டன் மாகஸ் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *