இலங்கை கிரிக்கெட் அணி அபார வெற்றி!

உலகக்கிண்ண ரி20 தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக சரித் அசலங்க 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பெதும் நிசங்க 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் என்ரு ரசல் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஹட்மயர் ஆட்டமிழக்காது 81 அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் வனிந்து அசரங்க, பினுர மற்றும் கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய, சூப்பர் 12 சுற்றில் தான் கலந்து கொண்ட 5 போட்டிகளில் 2 போட்டிகளில் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *