இலங்கையில் மீண்டும் முடக்க நிலைமை ஏற்படும் அபாயம்!

சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் நாடு திறக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அதனை கண்டுக்கொள்ளவில்லை என்றால் ஆபத்தான நிலைமை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் ஆபத்தான மற்றுமொரு கொவிட் அலை உருவாக கூடும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவிந்த டி செய்ஸா (Navinda De Soysa) தெரிவித்துள்ளார்.

நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான ஒரு படியாக கொவிட் சுகாதார வழிகாட்டுதல்கள் தளர்த்தப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும், சரியான கட்டுப்பாடு இல்லாமல் செய்தால் எதிர்வரும் நாட்களில் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு சில சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சுகாதார வழிகாட்டுதல்களில் இருந்து விலகி சாதாரணமாக செயல்பட்டால் நாடு மீண்டும் முடக்க நிலைக்கு செல்வதனை தடுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *