இலங்கை இன்னமும் ஆபத்தான நிலையில் மருத்துவர் சங்கம் தெரிவிப்பு!

இலங்கை இன்னமும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது என இலங்கை மருத்துவர் சங்கத்தின் உப தலைவர் டொக்டர் மனில்க சுமனதிலக தெரிவித்துள்ளார்.

கொழும்பு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

கோவிட் பெருந்தொற்று நிலைமைகளில் அதி ஆபத்தான வலயங்களில் ஒன்றாக அதாவது சிகப்பு வலயத்திலேயே இன்னும் இலங்கை உள்ளது.

இந்த வகையீட்டிலிருந்து மீள வேண்டுமாயின் நாளாந்த கோவிட் தொற்றாளர் எண்ணிக்கையை 950 ஆக குறைக்க வேண்டும். கோவிட் பரிசோதனைகளில் உறுதியாகும் நோயாளிகள் எண்ணிக்கை 2.5 வீதமாக இருக்க வேண்டும்.

இதற்காக நாம் பரிசோதனைகளை குறைத்துவிடக் கூடாது. கடந்த 7ம் திகதி அளவில் பரிசோதனை நடாத்தப்படவோரில் 30 வீதமானவர்களுக்கு தொற்று உறுதியாகியிருந்தது.

தற்பொழுது கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அது ஆபத்தான நிலைமை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் நாம் மீண்டும் முன்பிருந்த நிலைக்கே திரும்ப செல்ல நேரிடும்.

வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கை கனிசமான வீழ்ச்சி பதிவாகியுள்ளது என டொக்டர் மனில்க சுமனதிலக்க தெரிவித்துள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *