பாராளுமன்ற உறுப்பினர்கள் 58 பேருக்கு புதிய பதவி!

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை துரிதப்படுத்தும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கண்காணிப்பு உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியை சேர்ந்த 58 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இவ்வாறு கண்காணிப்பு உறுப்பினர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள 58 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான நியமனக்கடிதங்கள் அடுத்த வாரம் நிதி அமைச்சின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு நியமனம் பெறும் உறுப்பினர்களுக்கு சலுகைகளுடன் கூடிய அரச வாகனம், எரிபொருள் மற்றும் கொடுப்பனவும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.