சிறைச்சாலை வைத்தியர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!


பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தார் எனத் தெரிவித்து சிறைச்சாலை வைத்தியர் ஒருவர் பொரளை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

‘ சிறைச்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஆம் திகதி நோயாளி ஒருவரை பரிசோதித்துக்கொண்டிருந்தேன். அப்போது ரிஷாட் பதியுதீன் பலவந்தமாக உள்ளே நுழைந்தார். அவரை வெளியில் நிற்குமாறு கூறினேன்.

இதனையடுத்தே ரிஷாட் பதியுதீன் மரண அச்சுறுத்தல் விடுத்தார். எனக்கு தேவையான வைத்தியர் ஒருவரை இங்கு கொண்டுவர முடியும். உம்மை மாற்றவும் முடியும். வேறு உலகுக்கு அனுப்பவும் முடியும். உமக்கு ஆயுள் குறைவு. நீ கவனமாக இருந்துக்கொள்.’ – என கடும் ஆவேசத்துடன் ரிஷாட் பதியுதீன் மிரட்டினார் என குறித்த வைத்தியர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சிறைச்சாலையின் பிரதான வைத்தியரிடமும்இ அதிகாரியிடமும் சம்பந்தப்பட்ட வைத்தியர் முறையிட்டுள்ளார். அதன்பின்னரே பொரளை பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

அத்துடன்இ சம்பந்தப்பட்ட வைத்தியரிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று வாக்குமூலம் பதிவு செய்தனர். மகஸின் சிறைச்சாலைக்குச்சென்று சம்பவம் நடைபெற்ற இடத்தையும் கண்காணித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *