கொவிட் தொற்றாளர்கள் கண்ணுக்கு எதிரிலேயே இறந்து போகலாம்!

அடுத்த சில தினங்களுக்குள் இலங்கையில் தினமும் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5ஆயிரத்தை தாண்டி, மரணங்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டும் என மருத்துவ நிபுணர்களை எச்சரித்துள்ளனர்.

தற்போது காணப்படும் தொற்று பரவல் அடுத்த சில வாரங்களில் மோசமான நிலைமைக்கு மாறும் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் நெரிசல் காரணமாக ஏனைய நோயாளிகள் வைத்தியசாலைக்கு வர அஞ்சுவது இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தற்போது வைத்தியசாலையில் போதுமான ஒக்சிஜன் இருந்த போதிலும் ஒரு வாரத்தில் ஒக்சிஜனுக்கு ஏற்படும் தட்டுப்பாடு காரணமாக தொற்றாளர்கள் கண்ணுக்கு எதிரிலேயே இறந்து போகலாம் எனவும் விசேட மருத்துவ நிபுணர்கள் மிக ஆபத்தான எச்சரிக்கையை விடுத்துள்ளனர். 

உடனடியாக மக்களின் நடமாடத்தை கட்டுப்படுத்தவில்லை என்றால், நிலைமை மேலும் மோசமாகும் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுனேத் அங்கம்பொடி, குறித்த ஊடகத்திடம் குறிப்பிட்டுள்ளார்.

வைத்தியசாலையின் ஊழியர்கள் தொற்றுக்கு உள்ளாகி வரும் நிலைமையும் பாரதூரமான இடத்திற்கு தள்ளியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *