வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் இடமில்லை!
கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் பதிவான நிலையில், ராகம வைத்தியசாலையின் கொரோனா நோயாளர் விடுதியில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள கட்டில்கள் நிரம்பியுள்ள நிலையில், அதிகளவானவர்கள் நிலத்திலும், கிடைக்கும் இடத்தில் அமர்ந்துள்ளதை காணமுடிகின்றது.
இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகியுள்ளன.