அட்மிரல் ரவீந்திரவுக்குப் பிணை!

கொழும்பில் 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்பு சபையின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று உத்தரவிட்டார்.

10 இலட்சம் ரூபா சரீரப் பிணை இரண்டில் இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எந்தவொரு முறையிலும் இது ​தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு தடையேற்படுத்த வேண்டாம் என்றும், தனது பதவியைப் பயன்படுத்தி சாட்சியாளர்களை அச்சுறுத்தல் விடுக்க வேண்டாம் என்றும், குறிப்பாக லெப்டினன் கமாண்டர் கலகமகே லக்சிறி என்ற அதிகாரிக்கு அச்சுறுத்தல் விடுக்க வேண்டாம் என்றும்ரவீந்திரவுக்கு நீதிவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அறிவிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறும் பிணையின் நிபந்தனைகளை மீறினால் பிணை நிபந்தனைகளை இரத்து செய்துவிட்டு மீண்டும் விளக்கமறியலில் வைப்பதாகவும் நீதிவான் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *