ரிஷாத் பதியுதீன் பயன்படுத்திய வாசஸ்தலத்திற்கு சீல்!

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சராக இருந்த காலத்தில்  பயன்படுத்திய உத்தியோகபூர்வமான வாசஸ்தலத்தில்,   இரண்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு பௌத்தலோக்க மாவத்தையிலுள்ள, ரிஷாட்டின்  வீட்டில் பணிப்பெண்களாக பணியாற்றிய சிறுமி உட்பட 11 பேரில், 9 யுவதிகள் இதுவரையிலும் வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர் என விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடலில் சூடுவைத்தமை, தாக்கியமை மற்றும் ஏனைய துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்தமை உள்ளிட்டவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெற்றிருக்கலாம் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவ்விரு அறைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தற்போதை அரசாங்கத்தின் கீழ், அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு ​கொடுக்கப்பட்டது. எனினும், அவருக்கு கொழும்புக்கு அண்மையில் வீடு இருப்பதனால், அந்த உத்தியோகபூர்வ வாசஸ்தலம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவு பொதிகளை பொதியிடுவதற்கான மத்திய நிலையமாக அந்த உத்தி​யோகபூர்வ இல்லம், சில நாள்களுக்கு பயன்படுத்தப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *