குற்றவாளிக்கு 10 வருடங்கள் வரை சிறைத்தண்டனை!

16 வயதான சிறுமி ஹிசாலினி மரணம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோருக்கு 2 முதல் 10 வருடங்கள் வரை சிறைத் தண்டனையை வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரண இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

பணிப் பெண்ணாக கடமையாற்றிய நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த ஹிசாலினியை, ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு அருகிலுள்ள அறையொன்றில் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.

விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

18 வயதுக்கு குறைவான சிறுமியொருவரை இரவு நேரங்களில் தனியான அறையொன்றில் பாதுகாப்பற்ற முறையில் தங்க வைப்பது, தண்டனைக்குரிய குற்றமாகும்.

குறித்த சிறுமியை இவ்வாறு நடத்திய குற்றச்சாட்டு தொடர்பில், குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோருக்கு 2 முதல் 10 வருடங்கள் வரை சிறைத் தண்டனையை வழங்க முடியும்.

அத்துடன், சிறுவர்களை விற்பனை செய்தல், கொள்வனவு செய்தல் மற்றும் அவற்றுக்கு உதவி புரிதல் ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு, இலங்கை தண்டனை சட்டக் கோவையின் பிரகாரம், குற்றவாளிகளுக்கு 20 வருடங்கள் சிறைத் தண்டனையை வழங்க முடியும்” என அவர் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *