சீனாவில் உருவான வைரஸை விடவும் இந்தியாவின் டெல்டா ஆட்டிப்படைக்கிறது!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளில் பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளன. ஆனால், அவற்றை எல்லாவற்றையும் விட இந்தியாவில் உருமாற்றம் அடைந்த கொரோனா டெல்டா வைரஸ்தான் இப்போது உலகத்தை அதிகமாக ஆட்டிப்படைக்கிறது.
 தற்போது 115 நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் உள்ளது. மேலும், உலக நாடுகளில் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட வைரசை பரிசோதனை செய்ததில், 75 சதவீதம் பேர் டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்துள்ளது.

இந்நிலையில், சீனாவில் இருந்து பரவிய அசல் கொரோனா வைரசை விட, மனிதனின் சுவாசப்பாதையை டெல்டா வைரஸ் கடுமையாகவும், அதிகமாகவும் தாக்குவது தெரிய வந்துள்ளது.  உருமாறிய டெல்டா வைரஸ் பற்றி ஆராய்ச்சி செய்து வரும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய இயக்குனர் ரோசெல் வாலென்ஸ்கி நேற்று கூறுகையில், “இதற்கு முந்தைய உருமாறிய கொரோனா வைரஸ்களை விட டெல்டா வகை வைரஸ் மிக ஆபத்தானது. உருமாறிய டெல்டா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாசப் பாதையில் அதிவேகமாக பரவக் கூடிய ஆயிரம் மடங்கு டெல்டா வைரஸ்கள் உள்ளன. சுவாசப் பாதையை மிக வேகமாக பாதிக்க கூடிய இது போன்ற வைரசை கண்டதில்லை,’’ என்றார்.

டிசம்பருக்குள் 135 கோடி தடுப்பூசி
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் நேற்று அளித்த எழுத்து பூர்வமாக பதிலில், ‘தற்போது நாட்டில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தடுப்பூசி பற்றாக்குறை குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஒன்றிய அரசு கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளது. ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் 135 கோடி தடுப்பூசி கிடைக்கும்,’ என கூறியுள்ளார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *