மட்டக்களப்பு அநாதை இல்லத்தில் கொவிட் கொத்தணி 23 சிறார்கள் பாதிப்பு!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை பிரதேசத்தின் அநாதை இல்லம் ஒன்றின் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
குறித்த இல்லத்தின் 33 சிறுவர்கள் மீது மேற்கொள்ளப் பட்ட அன்டிஜென் சோதனையில் இது உறுதிப்படுத்தப் பட்டதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.மயூரன் தெரிவித்தார்.
அதன்படி ஆபத்து காரணமாக அநாதை இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டு குறித்த குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.