பாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த 225 உறுப்பினர்களையும் ஆற்றில் வீச வேண்டுமாம்!

பொதுமக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்து புதிய வேட்பாளர்களை பொதுத்தேர்தல் களத்தில் இறக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் மாவட்ட முகாமையாளர் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த 225 பேரையும் தியவன்ன ஓய ஆற்றில் வீச வேண்டும் என்று மக்கள் கூறிவந்தனர்.

எனவே ஐக்கிய தேசியக்கட்சி இந்த முறை புதிய வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளது என்று ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

எனவே புதியவர்களில் இருந்து மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளர்கள் மத்தியில் அனுபவம் வாய்ந்தவர்கள் உட்பட்ட தொழில்துறை சார்ந்த இளைஞர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவும், அநுரகுமாரவும் அரசியல் அனுபவம் இல்லாத ஒருவரிடம் தோல்வியடைந்தனர்.

எனினும் பொதுமக்கள் இப்போதே கோட்டாபய ராஜபக்ச மீதுள்ள நம்பிக்கையை இழந்துள்ளனர்.அத்துடன் அரசியலிலும் அவர்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்.

இந்தநிலையில் நாடு எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்கொள்ள ஐக்கிய தேசியக்கட்சியினால் மாத்திரமே முடியும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *