வருமானமின்மையால் சீனாவிற்கு நிலங்களை விற்பனை செய்யும் இலங்கை!

இலங்கையானது தகுந்த வருமானமின்மையினை நிவர்த்தி செய்வதற்காக சீனாவிற்கு தமது நிலங்களை விற்பனை செய்கின்றதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அதாவது, இலங்கையின் கோட்டையான கொழும்பு 01 நகரமும் விரைவில் சீனர்களுக்கு விற்கப்படும்.அதனையும் நாம் விரைவில் இழந்துவிடுவோம்.

இதன்படி, பார்ப்போமானால் எதிர்வரும் காலங்களில் கொழும்பு நகரம் சீனாவாக மாறும் காலமும் ஏற்படலாம்? அவ்வாறான நிலைப்பாட்டிலேயே தற்போது நாடு சென்றுக்கொண்டிருக்கின்றது.இவ்வாறான கருத்துக்கள் நாட்டிற்கு எதிரானவை அல்ல.

இதேவேளை,இலங்கையை எதிர்காலத்தில் ஏனைய நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு சீனா ஒருபோதும் அங்கீகாரம் வழங்காது.

எதிர்வரும் காலங்களில் இலங்கை நாடாளுமன்றத்திலும் சீனா தனது பிரஜைகளை கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக வரும் வாய்ப்பும் உண்டு.ஆனால் அவையெல்லாம் நிச்சயம் நடைபெறும் அவ்வாறான நிலைப்பாட்டிலேயே நாடு சென்றுக்கொண்டிருக்கின்றது.

மேலும்,தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனைவராலும் தெரிவு செய்யப்பட்டவர். அவரை ஜனாதிபதியாவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.இருப்பினும் அவர் ஒரு அரசியல் வாதியல்ல.அரசியல் என்பது ஒரு கலை.அதனை எல்லோராலும் செய்து விட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *