முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை அகற்ற வேண்டும்!

நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சார்ச் நகரிலுள்ள 2 மசூதிகளில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதன் 2-ஆவது ஆண்டு தினம் அந்த நாட்டில் சனிக்கிழமை 14.03.2021 கடைபிடிக்கப்பட்டது.

அந்த நகர அரங்கத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானவர்கள்  கலந்துகொண்டனர்

அப்போது பிரதமர் ஜெசிந்தா  பேசியதாவது:

இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பேசுவதற்கான உரையை தயாரிக்கும்போது எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. அந்த வார்த்தையை பயன்படுத்தினாலும் நடந்ததை ஒருபோதும் மாற்ற முடியாது.
வார்த்தைகளால் அற்புதங்களை நிகழ்த்த முடியாவிட்டாலும், அவற்றால் காயங்களை ஆற்ற முடியும்.

கிறைஸ்ட்சார்ச் மசூதித் தாக்குதலின்போது மட்டுமல்ல, அதற்கு முன்பிலிருந்தே முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு  இருந்து வருகிறது. நமது வார்த்தைகளால் அந்த வெறுப்புணர்வை அகற்ற வேண்டும். நியூஸாலாந்து அனைத்து தரப்பினருக்கும் சொந்தமானது என்பதை உணர்த்த வேண்டும் என்றார் பிரதமர் ஜெசிந்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *