கைலாசாவில் உணவு, தங்குமிடம்,விசா இலவசம் நித்தியானந்தா அறிவிப்பு!

தனது சொந்த தீவு தேசத்தை உருவாக்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து, நித்யானந்தா இப்போது பார்வையாளர்களுக்கு விசா வழங்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தலைமறைவான சுய-பாணியிலான கடவுள் நித்தியானந்தா தனது சொந்த தேசமான கைலாசாவை உருவாக்கியுள்ளார். மேலும் அதன் சொந்த பாஸ்போர்ட்டையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது கைலாசா நாட்டிற்கு வருபவர்களுக்கு இலவச விசா மற்றும் மூன்று நாட்களுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என அறிவித்துள்ளார். மேலும் கருடா என்று அழைக்கப்படும் சார்ட்டர் விமான சேவைகள் ஆஸ்திரேலியாவிலிருந்து கைலாசா வரை தொடங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் கைலாசா தீவு நாடு பார்வையாளர்களை மூன்று நாட்களுக்கு மேல் தங்குவதை தடைசெய்துள்ளது மற்றும் பார்வையாளர்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கக்கூடிய ஒரு மின்னஞ்சல் ஐடியையும் உருவாக்கியுள்ளது.

இந்த ஐடி மூலம் தொடர்பு கொள்பவர்கள், தங்கள் சொந்த செலவில் ஆஸ்திரேலியா வரை செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து விமானத்தில் ஏற்றிக்கொண்டு செல்வது முதல், மூன்று நாளைக்குத் தேவையான அனைத்தும், கைலாசா அரசால் இலவசமாக வழங்கப்படும். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஆஸ்திரேலியாவில் அதேஹ் இடத்திற்கு திரும்ப கொண்டுவந்த விடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நித்யானந்தா நாட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைத் தொடங்கினார். இது கைலாசா தீவை எல்லைகள் இல்லாத ஒரு நாடு என்று விவரித்தது. உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் இது உருவாக்கப்பட்டது என்றும் தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை கடைப்பிடிக்கும் உரிமையை இழந்தவர்கள் இங்கு குடிபெயரெலாம் என அழைப்பு விடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *