எக்ஸ்ரே மூலம் கொரோனா வைரஸை அறிந்து கொள்ள தொழில்நுட்பம் அறிமுகம்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு நுரையீரல் எக்ஸ் ரே புகைப்படங்களை கொண்டு ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
டீப்கொவிட் எக்ஸ்ஆர் (DeepCOVID-XR) என அழைக்கப்படும் புதிய தொழில்நுட்பம் மெஷின் லெர்னிங் அல்காரிதம் மூலம் இயங்குகிறது.
இந்த தொழில்நுட்பம் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறதா என்பதை பத்து மடங்கு வேகமாகவும், அதிக துல்லியமாகவும் கண்டறிகிறது. இதுபற்றிய ஆய்வு கட்டுரை ரேடியாலஜி இதழில் வெளியாகி இருக்கிறது.
இது கொரோனா வைரஸ் தொற்று தவிர வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளிடம் மருத்துவர்கள் பயன்படுத்தலாம் என இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கும் ஆய்வு குழு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
இந்த தொழில்நுட்பம் பாதிப்பு இருக்கிறதா என்பதை எளிதில் கண்டறிவதால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை விரைவில் தனிமைப்படுத்தி, அடுத்தக்கட்ட சிகிச்சையளிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.