குளியலறையில் மயக்கம் வருவது ஏன்?

நம்மில் ஆரோக்கியமான பலர் திடீரென குளியலறையில் விழுந்த பிறகு  பக்கவாதம் மற்றும் மயக்கம் போன்ற கவலையான செய்திகள் பலவற்றை நாம் அடிக்கடி கேள்விப் படுகிறோம்.

பெரும்பாலும் குளியலறை தவிர  வேறொரு இடத்தில் விழுவதை நாம் ஏன் கேள்விப்படவில்லை?

  ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்ற கலந்துரையாடல் வகுப்பில் பங்கேற்ற சகோதரர் ஒருவர் கூறும்போது,

அவர் குளிக்கும் போது முதலில்  தலைமுடியைக் கழுவ வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

நாம் குளிக்கும்போது முதலில் உடலின் மற்ற பாகங்களை கழுவ வேண்டும்.

ஏனென்றால், தலை ஈரமாகவும் குளிராகவும் இருக்கும்போது, ​​தலையை சூடாக்க இரத்தம் நம் தலையை நோக்கி பாயும்.

அச்சமயத்தில்  இரத்தம் பயணிக்கக்கூடிய நாளங்கள் குறுகினால், அது இரத்த நாளங்களை சிதைப்பதற்கு வாய்ப்புள்ளது.
இது வழக்கமாக குளியலறையில் மட்டுமே  நடப்பதால்,  நமக்கும் நமது உற்றார் உறவினர்களுக்கும் இதுபோன்று நிகழாமல் இருக்கவே இந்த விழிப்புணர்வு பதிவு.

*நாம் முதலில் குளிக்கும்போது எதில் இருந்து நீர் ஊற்ற தொடங்கி பின் தலைக்கு எப்படி நீர் ஊற்ற வேண்டும் என்பதை வரிசை படியாக கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.*

1.  ஈரப்பதம் பாதத்தின் அடிப் பகுதியிலிருந்து தொடங்குகிறது.

2. பாதத்திற்கு மேல் உள்ள  முழங்கால் பகுதி. 

 3.  தொடைகள்.

 4.  அடிவயிறு.

  5.  தோள்பட்டை.

  ⏱️ 6.  5-10 விநாடிகள் நீர் ஊற்றாமல் சிறு இடைவேளை.

 இச்சமயத்தில் நம் உடலில் இருந்து நீராவி அல்லது காற்று நிரம்பி வழிவது போல் உணருவோம், பின்னர் வழக்கம் போல் தலைக்கு நீரூற்றி குளிக்கவும்.

  ✅ *ஞானம்*:

முதலில் நேரடியாக  தலைக்கு நீர் ஊற்றுவது என்பது  சூடான நீரில் நிரப்பப்பட்ட கண்ணாடி கிளாஸில் ,  குளிர்ந்த நீரை  நிரப்பினால்.  என்ன நடக்கும்?

கண்ணாடியில்  வெடிப்பு ஏற்பட்டு உடையும் நிலை வரும் ⚡ !!!

   இதேபோன்ற நிகழ்வு நம் உடலில் ஏற்பட்டால் … எது உடையும்?

பொதுவாக  நமது உடல் வெப்பநிலை  சூடாகவும், தண்ணீர்  குளிராகவும் இருக்கிறது, எனவே முதலில் நாம் உடலில் அல்லது தலையில் நேரடியாக நீர் ஊற்றும்போது, இரத்த நாளங்கள் சிதைவதால் காற்று சிக்கிக் கொள்ளும் அல்லது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

   இதனால்தான் மக்கள் திடீரென குளியலறையில் விழுவதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம்.

❌ தவறான குளியல் முறையின் காரணமாகவே, பலருக்கு பக்கவாதம் அல்லது ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.

 இந்த பாதம் முதல் தலைவரை நீரூற்றி குளிக்கும் முறையானது அனைத்து வயதினருக்கும் பொருத்தமானது.

 அதிலும் குறிப்பாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் ஒற்றைத் தலைவலி / தலைவலி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது.

அன்றாட வாழ்வில் நம்முடன் ஒன்றிப்போன குளியல் என்ற முக்கியமான பகுதியினை முறையுடன் செய்து ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு இப்பதிவு உதவட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *