கோழியை பலாத்காரம் செய்த கணவன் வீடியோ எடுத்த மனைவி கைது!

இங்கிலாந்தை சேர்ந்த ரெஹான் பேக் (37). இவரது மனைவி ஹலீமா பேக் (38). இவர்களுக்கு பிராட்போர்டு கிரவுன் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கு என்னவென்றால், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் விலே ரெஹான் பேக், தனது வீட்டின் அடித்தளத்தில் தான் வளர்த்து வந்த கோழியை பலாத்காரம் செய்தார். அதனை, அவரது மனைவி ஹலீமா பேக் ‘கோப்ரோ’ கேமராவைப் பயன்படுத்தி வீடியோவில் பதிவு செய்தார். சில நாட்கள் கழிந்து அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து போலீசார் உடனடியாக அந்த வீடியோவை முடக்கியதுடன், தம்பதிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கின் தீர்ப்பு பிராட்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், ‘குற்றம்சாட்டப்பட்ட நபரின் மனைவி அவருடன் சேர்ந்து கொண்டு வீடியோ எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் ரெஹான் கோழிகளுடன் பாலியல் உறவு கொண்டபோது, தன் மனைவியின் அருகில் அடிக்கடி வந்து சென்றுள்ளார். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட இரு கோழிகளும், அடுத்த சில மணி நேரங்களில் இறந்தன.

குற்றம் சாட்டப்பட்டவரின் நடத்தை இழிவானது. மிகவும் வக்கிரமானது. இவர்களது நடவடிக்கைகள் சமூகத்தின் எந்தவொரு சாதாரண மனிதரையும் காயப்படுத்தும். மேலும், ஹலீமா பேக் தனது கணவரின் கொடூரமான செயலுக்கு உதவியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அதனால், இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது’ என்று அறிவிக்கப்பட்டது.

முன்னதாக தம்பதிகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து இரண்டு கம்ப்யூட்டர், ஒரு மடிக்கணினி, ஒரு மொபைல் போன் மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக வீடியோக்களை பறிமுதல் செய்தனர். அந்த வீடியோக்களில், நாய் போன்ற வீட்டு விலங்குகளிடம் ரெஹான் பேக் பாலியல் உறவு கொண்ட காட்சிகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *