தொழில்களை இழந்தவர்களுக்கு வேறு தொழில் நடைமுறை அறிமுகம்!

கொவிட் – 19 தொற்று காரணமாக இதுவரையில் பல்வேறு நாடுகளில் தொழில்வாய்ப்புக்களை இழந்துள்ள இலங்கை பணியாளர்களுக்கு வேறு இடங்களில் தொழில்வாய்ப்பு வழங்கும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் செப்டெம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இது தொடர்பாக வெளிநாட்டு வேலைவாப்பு பணியத்தின் தலைவர் கமல் ரத்வத்தையினால் சுற்றறிக்கை மூலம் வெளிநாட்டு வேலைவாப்பு முகவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் தொடர்பான உடன்படிக்கை கால எல்லை முடிந்த பின்னர் நாடு திரும்ப முடியாதுள்ள பணியாளர்களுக்கு தற்போதுள்ள நாட்டில் வேறு தொழில்வாப்புகளை பெறுவதற்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான அனுமதி மற்றும் பாதுகாப்பு முத்திரையிடப்பட்ட கடவு சீட்டை பெற்றுக்கொடுப்பதற்கான நடைவடிக்கை பணியாளர்கள் இருக்கும் இலங்கை தூதரக அலுவலகத்தின் தொழிலாளர் சேமநால நிதியத்தின் மூலம் மேற்கொள்ள முடியும்.
தேவையான ஆவணங்களை நாட்டிலுள்ள தொழில் முகவர்கள் மூலம் பணியாளர்கள் தொழில் செய்ய எதிர்பார்த்துள்ள இடத்தின் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அனுப்பி வைப்பதற்கு நடைவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன் மூலம் இந்த வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *